நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு எப்போது ? - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு எப்போது ?  - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 13 Oct 2022 8:32 PM IST (Updated: 13 Oct 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

எப்போது நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் . ஸ்டாலின் அவர்களே.? இவ்வாறு தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும்,எதிர்க்கட்சித் தலைவர்,எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அம்மாவின் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த விடிய அரசு கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த வழக்கை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் இந்த விடியா திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தரவரிசை பட்டியல் வெளி வர உள்ள நிலையில், வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பதில் மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் இந்த விடிய அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்வோம் எனவும், அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த இந்த அதிமுக அரசின் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இந்த முறையாவது தகுந்த மூத்த வழக்கறிஞரை நியமித்து அம்மா அரசு தொடர்ந்த நீட் தொடர்பான வழக்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கழகத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பொய் வழக்குகளை தொடுப்பதற்காக செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது நீட் வழக்கிற்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போது நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் . ஸ்டாலின் அவர்களே.? இவ்வாறு தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story