குண்டர் சட்டத்தில் கைதானவரின் மனைவி, 3 குழந்தைகள் எங்கே?


குண்டர் சட்டத்தில் கைதானவரின் மனைவி, 3 குழந்தைகள் எங்கே?
x

குண்டர் சட்டத்தில் கைதானவரின் மனைவி, 3 குழந்தைகள் எங்கே?- போலீசார் விசாரணை

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி பரகத் நிஷா என்ற மனைவியும், ஜாபர் சாதிக் (6), ஷேக் அலாவுதீன் (5) ஆகிய மகன்களும், வாபியா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

சதாம் உசேன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் தனது தண்டனை காலம் முடிந்து ஊருக்கு திரும்பினார். இந்தநிலையில் தனது மற்றும் 3 குழந்தைகளை காணவில்லை என்று ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story