யானை துரத்தியபோது கீழே விழுந்து படுகாயமடைந்த வேட்டை தடுப்பு காவலர் சிகிச்சை பலனின்றி சாவு


யானை துரத்தியபோது கீழே விழுந்து படுகாயமடைந்த  வேட்டை தடுப்பு காவலர் சிகிச்சை பலனின்றி சாவு
x

யானை துரத்தியபோது கீழே விழுந்து படுகாயமடைந்த வேட்டை தடுப்பு காவலர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஈரோடு

தாளவாடி

யானை துரத்தியபோது கீழே விழுந்து படுகாயமடைந்த வேட்டை தடுப்பு காவலர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

யானை துரத்தியது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் வேட்டைத்தடுப்பு காவலராக தாளவாடியை அடுத்த சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த லெனின்ராஜ் (வயது 26) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் திருமணம் ஆகாதவர்.

இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு இரியபுரம் கிராமத்துக்குள் ஒரு காட்டு யானை புகுந்தது. அதை விரட்டுவதற்காக லெனின்ராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மரியஜான், சண்முகம், சிவா ஆகியோர் சென்றனர். அப்போது யானையை அவர்கள் விரட்டியபோது, லெனின்ராஜை யானை துரத்தி உள்ளது.

சுயநினைவில்லாமல்...

யானையிடம் இருந்து தப்பிக்க லெனின்ராஜ் ஓடியபோது கீழே விழுந்துள்ளார். பின்னர் சுதாரித்து எழுந்துகொண்டார். மற்ற வேட்டை தடுப்பு காவர்கள் சேர்ந்து யானையை விரட்டிவிட்டார்கள்.

அதன்பின்னர் மீண்டும் ஊருக்குள் வந்தால் யானையை துரத்தவேண்டும் என்று தாங்கள் வந்த வனத்துறை ஜீப்பிலேயே லெனின்ராஜ் உள்பட 4 பேரும் படுத்து தூங்கினார்கள். மறுநாள் காலை அனைவரும் எழுந்துவிட்டார்கள். ஆனால் லெனின்ராஜ் மூக்கில் ரத்தம் வழிய சுயநினைவின்றி கிடந்தார். இதனால் உடனே அவரை சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோரிக்கை

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி லெனின்ராஜ் நேற்று இறந்தார். யானை துரத்தும்போது கீழே விழுந்த லெனின்ராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அறியாமல் அவர் தூங்க சென்றுள்ளார். இதன்காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யானையை விரட்ட சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்த லெனின்ராஜ் குடும்பத்தாருக்கு வனத்துறை உாிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று வேட்டை தடுப்பு காவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Next Story