கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி


கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 1-ந் தேதி முதல் முகாம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் 3 மாத கோழிகுஞ்சு முதல் அனைத்து பருவ கோழிகளுக்கும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 6 மாதத்திற்குள்ளும் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். இல்லையேல் 'ராணிக்கெட்" வைரஸ் தாக்கி வெள்ளைக்கழிச்சல் நோயால் பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக நடைபெறும் இந்த முகாமில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும். இதற்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story