மதுரை அருகே கண்மாயில் பொங்கிய வெள்ளை நுரை


மதுரை அருகே கண்மாயில் பொங்கிய வெள்ளை நுரை
x

மதுரை அருகே கண்மாயில் பொங்கிய வெள்ளை நுரை

மதுரை


மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக மதுரையில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் வேகமாக நிரம்பிய நிலையில் விவசாயத்திற்காக கண்மாயில் இருந்து பாசன நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், மதுரை அருகே அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், வெள்ளைக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் கலந்துள்ளதால், வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி வெளியேறியது. இதனால், பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

இதுபோல், இந்த வெண்ணிற நுரை காற்றில் பறப்பதால் மதுரை விமான நிலையம் செல்லும் சாலை வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


Next Story