வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில் காவடி பால்குட திருவிழா


வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில்  காவடி பால்குட திருவிழா
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில் காவடி பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில் காவடி பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வேம்பு மாரியம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையில் வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. காவிரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றின் கரையில் ஒருபுறம் வெள்ளை நிற இலைகளுடன் கூடியதும், மறுபுறம் அடர்பச்சை நிறத்தில் உள்ள இலைகளுடன் அமைந்திருக்கும் வெள்ளை வேம்பு மரத்தடியில் அம்மன் எழுந்தருளி உள்ளார்.

இதனால் வெள்ளை வேம்பு மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 66-ம் ஆண்டு காவடி பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது.

பால்குடங்களுடன் ஊர்வலம்

இதனை முன்னிட்டு மஞ்சள் ஆற்றங்கரையிலிருந்து வாணவேடிக்கைகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், அலகு காவடி, அலங்கார காவடி பால்குடங்களுடன் பக்தர்கள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

விரதம் இருந்த பக்தர்கள் 16 அடி நீள அளகுகளை குத்தியபடி பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். இதில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.


Next Story