கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணியும் நிகழ்ச்சி
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணிவித்து பேசினார். இதில் 150 மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துணை முதல்வர் சாத்விகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், சமுதாயத்தில் மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். ஏழை எளிய மக்களின் துயர்துடைக்க பாடுபட வேண்டும். சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பேசி, அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும். உங்களுடைய பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு மருத்துவராக பார்க்க வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளனர். அதற்கு தகுந்தாற்போல நீங்கள் நல்ல முறையில் படித்து சிறந்த மருத்துவராக உருவாக வேண்டும் என்று கூறினார்.