தென்காசியில் புதிய கலெக்டரை வாழ்த்த வந்த கல்வி அதிகாரி திடீர் சாவு அலுவலக வளாகத்தில் பரபரப்பு


தென்காசியில்  புதிய கலெக்டரை வாழ்த்த வந்த  கல்வி அதிகாரி திடீர் சாவு  அலுவலக வளாகத்தில் பரபரப்பு
x

தென்காசியில் புதிய கலெக்டரை வாழ்த்த வந்த மாவட்ட கல்வி அதிகாரி திடீரென மரணமடைந்ததால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

தென்காசி

தென்காசியில் புதிய கலெக்டரை வாழ்த்த வந்த மாவட்ட கல்வி அதிகாரி திடீரென மரணமடைந்ததால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கல்வி அதிகாரி

தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஆகாஷ் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூற பல்வேறு துறை அதிகாரிகள் வந்தனர்.

அப்போது சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி சுப்பிரமணியனும் (வயது 58) வந்திருந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டது.

சுப்பிரமணியனின் உடல் பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்

இறந்துபோன அதிகாரி சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் வன்னியம்பட்டி விலக்கு அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவருக்கு மனைவியும், 23 வயதில் மகளும், 18 வயதில் மகனும் உள்ளனர்.



Next Story