கல்யாண ராணியின் வலையில் சிக்கியவர்கள் யார்?பரபரப்பு தகவல்கள்


கல்யாண ராணியின் வலையில் சிக்கியவர்கள் யார்?பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண ராணியின் வலையில் சிக்கியவர்கள் யார்? என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

விழுப்புரம்


மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து ஏமாற்றிய மகாலட்சுமி யார், யாரை ஏமாற்றி உள்ளார்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

மகாலட்சுமியின் முதல் கணவர் நீலகிரி மாவட்டம் கோத்தக்கிரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். உடல் நலம் சரியில்லாமல் பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதன்பின்னர், மகலாட்சுமியின் உறவினர் ஒருவர் 3 குழந்தைகளையும் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டார்.

தொடர்ந்து அவரது வாழ்க்கையும் திசைமாறி சென்றுவிட்டது. கோத்தகிரியில் இருந்து கோவைக்கு வந்த மகாலட்சுமி, அங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது, கோவையை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் 6 மாதம் மட்டுமே வாழ்ந்த அவர், பின்னர் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

முகநூலில் விரித்த வலை

அதை தொடர்ந்து தன்னை அழகாக புகைப்படம் எடுத்து முகநூல் மூலம் தனது திருமண மோசடிகளை அவர் அரங்கேற்ற தொடங்கினார். அதில் அடுத்ததாக சிக்கியவர் வேலூரை சேர்ந்த மணி. இவருடன் 6 மாதம் சேர்ந்து வாழ்ந்தார். அதன்பின்னர் பண்ருட்டியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருடன் முகநூலில் பழகி, அவரையும் திருமணம் செய்து, 1½ ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.

இதற்கு அடுத்ததாக அவரது வலையில் சிக்கியவர் சிறுதலைபூண்டி மணிகண்டன். அவரை ஏமாற்றி சேலம் ஆத்தூரை சேர்ந்த சின்ராஜ் என்பவருடன் வாழ்ந்த போது தான் போலீசில் சிக்கி இருக்கிறார்.


Next Story