60 கிலோமீட்டர் தூரத்துக்குள் 2 சுங்கச்சாவடி அமைத்தது ஏன்?


60 கிலோமீட்டர் தூரத்துக்குள் 2 சுங்கச்சாவடி அமைத்தது ஏன்?
x

60 கிலோமீட்டர் தூரத்துக்குள் கணியம்பாடி, பிலாந்திபட்டு சுங்கச்சாவடிகள் எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது? என்று அதிகாரிகளிடம் கதிர்ஆனந்த் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

வேலூர்

60 கிலோமீட்டர் தூரத்துக்குள் கணியம்பாடி, பிலாந்திபட்டு சுங்கச்சாவடிகள் எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது? என்று அதிகாரிகளிடம் கதிர்ஆனந்த் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

சாலை பாதுகாப்பு

வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கதிர்ஆனந்த் எம்.பி. பேசுகையில், வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சில பஸ்கள் வெளியே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பயணிகள் பாதிப்படைகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின்னர் டவுன் பஸ்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட நேரக்கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

2 சுங்கச்சாவடிகள்

கணியம்பாடியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே தடுப்புகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. சாலையும் சரியில்லாததாக புகார் எழுந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி எதற்காக அமைக்கப்பட்டது. சாலை சரியில்லாமல் ஏன் கட்டணம் நாங்கள் செலுத்த வேண்டும். ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு இடையே 60 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். ஆனால் பிலாந்திப்பட்டில் இருந்து கணியம்பாடி சுங்கச்சாவடி 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளே தான் வருகிறது. எதன் அடிப்படையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. தேவையற்ற சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும்.

கந்தனேரியில் தேவையற்ற இடங்களில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஒளி பிரதிபலிப்பான்கள் வைக்க வேண்டும் என்றார்.

மாடுகளை விற்பனை செய்ய வேண்டும்

கூட்டத்தில், வேலூரில் மாடுகள் தொல்லையால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து விற்பனை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் மாடுகளை சாலையில் அவிழ்த்து விட மாட்டார்கள். சாலை விதிகளை பலர் மதிக்காமல் செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத தொகை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.


Next Story