ஒப்பந்த பணிகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?


ஒப்பந்த பணிகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?
x

விருதுநகர் நகராட்சியில் ஒப்பந்த பணிகள் தொடர்பான ஆவணங்கள் கூட்டத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படாதது ஏன்? என கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

விருதுநகர்


விருதுநகர் நகராட்சியில் ஒப்பந்த பணிகள் தொடர்பான ஆவணங்கள் கூட்டத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படாதது ஏன்? என கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

நகரசபை கூட்டம்

விருதுநகர் நகரசபை சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் ஸ்டான்லி பாபு, என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கலையரசன் மற்றும் மதியழகன் ஆகியோர் புதிய பஸ் நிலையம் செயல்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நகரசபை தலைவர் மாதவன் மாவட்ட நிர்வாகம் இது பற்றி முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.

விருதுநகரில் பழைய பஸ் நிலையமும், புதிய பஸ் நிலையமும் செயல்பட வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். நகராட்சியில் ஒப்பந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு முடிவு செய்யப்பட்ட பின்பும் அதற்கான ஆவணங்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படாதது ஏன்? என கவுன்சிலர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார், மதியழகன் ஆகியோர் சரமாரி கேள்வி எழுப்பினர்.

வருவாய் இழப்பு

மேலும் சமர்ப்பிக்கப்படாததற்கு கண்டனமும் தெரிவித்தனர். கவுன்சிலர் ஆறுமுகம் இதற்கான பைல்கள் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியபோது தலைவர், கமிஷனர் மற்றும் என்ஜினீயர் உரிய பதிலளிக்காத நிலையில் தலைவர் மட்டும் தனக்கு பைல் வந்து சேரவில்லை என தெரிவித்தார். அப்படியானால் பைல் எப்படி மாயமானது என கவுன்சிலர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார்.

மேலும் பொது ஏலத்தில் விட வேண்டிய பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோருவது விதிமீறல் என்றும், இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் பதவி இழக்க நேரிடும் என்றும் கவுன்சிலர் ஆறுமுகம் எச்சரித்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கவுன்சிலர் இந்திரா தனபாலன் மூத்த கவுன்சிலர் என்ற முறையில் ஆறுமுகம் அறிவுரை கூறலாம் என்று கூறினார்.

தீர்மானங்கள்

மேலும் அவர் தலைவர், கமிஷனர், என்ஜினீயர் ஆகியோர் ஒருங்கிணைந்து நகர் நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.கவுன்சிலர் உமா தனது வார்டுபகுதியில் ரூ.300 மதிப்பிலான பணிக்காக பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு அலைய வேண்டி வந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். பல்வேறு தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது


Next Story