பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு செல்லாதது ஏன்?- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பதில்


பா.ஜனதா கூட்டணி கட்சிகள்  ஆலோசனை கூட்டத்துக்கு செல்லாதது ஏன்?- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பதில்
x

பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு செல்லாதது ஏன் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

மதுரை


சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 பெண்களை கொடூரமான முறையில் நடத்தியது குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுப்பது அந்த மாநிலத்தின் கடமை. இந்திய அரசின் கடமை. டெல்லியில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் அங்கு செல்லவில்லை. பா.ஜனதா முறித்து கொள்ளும் வரை அவர்களுடனான கூட்டணியில் இருக்கிறோம். அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு. ரவீந்திரநாத் எம்.பி. விவகாரத்தில், நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்ததை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story