கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்தது ஏன்?


கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்தது ஏன்?
x

ஆரல்வாய்மொழியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்காதலர்கள் தற்கொலை

குமரி மாவட்டம் கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மனைவி ஷாமினியுடன் (32) விஷம் குடித்த நிலையில் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் பிணமாக கிடந்தனர்.

அருகில் இருந்த சொகுசு காரில் ஷாமினியின் 2 குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். தாய் இறந்தது கூட தெரியாமல் தூங்கிய குழந்தைகளை போலீசார் மீட்டனர்.

பின்னர் போலீசார் 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்த 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

மேலும் இதுபற்றி வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

கள்ளக்காதல் மலர்ந்தது எப்படி?

தற்கொலை செய்த டிராவல்ஸ் உரிமையாளரான ஆரோக்கிய சூசைநாதனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆரோக்கிய சூசைநாதனுக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் ஷாமினியை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டது. அதாவது ஷாமினியின் குழந்தைகளை ஆரோக்கிய சூசைநாதன் பள்ளிக்கு காரில் அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது ஷாமினியுடன், ஆரோக்கிய சூசைநாதன் நெருங்கி பழகியதோடு மனம் விட்டு பேசியுள்ளார்.

இந்த நெருக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதல் வலுவானதால் ஆரோக்கிய சூசைநாதனை ஷாமினி முழுமையாக நம்பினார். அதேபோல் ஆரோக்கிய சூசைநாதனும் ஷாமினி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத நிலைக்கு சென்றார்.

ஊரை விட்டு வெளியேறினர்

இந்த கள்ளக்காதல் விவரம் தெரிந்ததால் ஆரோக்கிய சூசைநாதனை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு வசதியாகி விட்டது. ஆனால் ஷாமினியின் கணவர் ராஜேஷ் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் கள்ளக்காதல் ஜோடியினர் ஊரை விட்டு வெளியேறி சந்தோசமாக வாழலாம் என முடிவு செய்தனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு சொகுசு காரில் ஆரோக்கிய சூசைநாதனும், ஷாமினியும் கிளம்பினர். உடன் தன்னுடைய குழந்தைகளையும் ஷாமினி அழைத்து சென்றார்.

4 நாட்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று சந்தோசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அவர்கள் அறிந்தனர். இதனால் போலீசாரும், இந்த சமுதாயமும் நம்முடைய கள்ளக்காதலை ஏற்க மாட்டார்கள் என இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். அந்த சமயத்தில் இருக்கின்ற பணமும் தீர்ந்து போனது.

எனவே இனிமேல் சாவிலாவது ஒன்று சேர்வோம் என முடிவெடுத்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உடல்கள் ஒப்படைப்பு

இதற்கிடையே தற்கொலை செய்த 2 பேருடைய உடல்களின் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் முதலில் ஷாமினி உடலும், பிறகு ஆரோக்கிய சூசை நாதன் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு கள்ளக்காதல் ஜோடிக்கு அவரவர் உறவினர்கள் சார்பில் இறுதி சடங்கு நடந்தது.


Next Story