கர்நாடகத்துக்கு முதல்-அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?


கர்நாடகத்துக்கு முதல்-அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?
x

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என பா.ஜ.க. எம்.எல்.ஏ. காந்தி கேள்வி எழுப்பினார்.

விருதுநகர்


மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என பா.ஜ.க. எம்.எல்.ஏ. காந்தி கேள்வி எழுப்பினார்.

மேலாண்மை வாரியம்

விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் மேகதாது அணைகட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு தமிழகத்திற்கு சீராக 177 டி.எம்.சி. காவிரி தண்ணீர் வழங்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்தநிலையில் பல்வேறு போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. 2021 ஜூன் மாதம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் அணை கட்ட முடியாது என்று மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங்ஷெகாவத் வெளிப்படையாக அறிவித்தார்.

மேகதாது அணை

தற்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் வாக்குறுதியல் ரூ9ஆயிரம்கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் என்று தெரியவில்லை. மேகதாது அணைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் காங்கிரஸ் கட்சியுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு

1974-ம் ஆண்டு காவிரி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தை தி.மு.க. அரசு வஞ்சித்ததை போல தற்போதும் மாநில அரசு மேகதாது அணை பிரச்சினையில் தமிழக மக்களை வஞ்சிக்க கூடாது. மேகதாது பிரச்சினையில் காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட நிர்வாகி காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர். தி.மு.க.வின் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.


Next Story