எலக்ட்ரீசியனுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது ஏன்?


எலக்ட்ரீசியனுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது ஏன்?
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் எலக்ட்ரீசியனுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது ஏன்? என்று மணமகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் எலக்ட்ரீசியனுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது ஏன்? என்று மணமகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் நின்றது

திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்கவிளையை சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும், குளப்பாறை பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பெற்றோைர இழந்த மணப்பெண் 10 வயது முதல் காப்பகத்தில் பாதிரியார்களின் பராமரிப்பில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தேமானூர் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் 'மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம். திருமணத்தை நிறுத்துகிறோம்' என மணப்பெண்ணை கவனித்து வருபவர்களின் தரப்பில் இருந்து செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மணமகன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மணமகள் மறுப்பு

அப்போது மணமகளை செல்போனில் ெதாடர்பு கொண்டு பேசிய போது, 'மணமகனுக்கு தற்ேபாது நோய் தொற்று இருப்பதால் தன்னால் திருமணம் செய்ய முடியாது' என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் மணமகள் தரப்பில் இருந்து இருவரும், மணமகன் தரப்பில் இருந்து இருவரும் குளப்பாறையில் காப்பகத்திற்கு சென்று மணமகளை சந்தித்து பேசினர். அப்போதும் அவர் 'எலக்ட்ரீசியனை திருமணம் செய்ய மாட்டேன்' என உறுதியாக கூறினார். அவருக்கு இருக்கும் 'நோய் குணமான பின்னர் திருமணம் செய்வாயா?' என்று கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் ஏமாற்றமுடன் திரும்பினர்.

இந்தநிலையில் திருமணத்தை மறுத்தது தொடர்பாக மணமகள் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட எலக்ட்ரீசியன் குறித்து விசாரித்த ேபாது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

டாக்டர் அறிவுரைப்படி...

அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால் விசா வழங்க அதிகாரிகள் மறுத்தனர்.

இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி மணமகனை அழைத்து மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கூறினோம். இந்த பரிசோதனை முடிவு குறித்து டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது 'மணமகனுக்கு நோய்த்தொற்று இருப்பதால் தற்போது திருமணம் செய்வது நல்லது அல்ல' என டாக்டர் அறிவுரை வழங்கினார். அதனால்தான் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story