முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?ஆர்.பி.உதயகுமார் கேள்வி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சந்தேகம்

நாடு முழுவதும் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் பண்டிகையின் நோக்கம். பிரதமர் மோடி, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். ஆனால் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லவில்லை. அவர் வெறும் தி.மு.க. தலைவராக இருந்து இருந்தால் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் ஒரு மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு வாழ்த்து சொல்லாமல் இருப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலி கூத்தாகி விட்டது. தினமும் கொலை, கொள்ளை என்ற செய்திகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது கோவையில் கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கான அறிகுறிகள் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் கலைக்க வேண்டும்.

தீபாவளியில் 2 நாட்களில் மட்டும் மது விற்பனை ரூ.464.21 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது மது விலக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன மு.க.ஸ்டாலின், தற்போது இலக்கு வைத்து மது விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்.

பட்டம்

2-வது முறையாக தலைவர் பதவி ஏற்ற ஸ்டாலினுக்கு, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புரட்சி தலைவர் என்று பட்டம் சூட்டி இருக்கிறார். புரட்சி தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர். ஒருவர் தான்.. நீங்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொன்னால், நிதி அமைச்சர் நிதி பற்றாக்குறை இருக்கிறது என்கிறார். எம்.ஜி.ஆரின் புரட்சி தலைவரின் பட்டத்தை அபகரிக்க நினைத்தால் மக்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story