"சிலிண்டர் விலை ஏன் உயர்கிறது?": சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்ட பெண்கள் - பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்..!
சிலிண்டர் விலை உயர்வு குறித்து பெண்கள் கேட்ட கேள்விக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுவர் விளம்பர பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
அப்போது சிலிண்டர் விலை ஏன் உயர்வு குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால் அதற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்ய வேண்டிய உள்ளது. கூடுதலாக மானியம் வழங்க நிதி இல்லை என்று கூறினார். மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டியுள்ளதாகவும் இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாததால் சிலிண்டர் ஏற்றத்தை தவிர்க்க முடியவில்லை என கூறினார்.