டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்காதது ஏன்? நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் கேள்வி


டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்காதது ஏன்? நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் கேள்வி
x

டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்காதது ஏன்? நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் கேள்வி கேட்டுள்ளார்.

அரியலூர்

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 27 தீர்மானங்களை முன்வைத்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பேசும்போது, டெங்கு ஒழிப்பு பணியில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்பதாலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் வேலையில் அவர்களுக்கு ஊதியத்தினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நகராட்சிக்கு வெளியே சம்பளம் கேட்டு காத்திருக்கும் தொழிலாளர்களை அதிகாரிகள் சந்தித்து உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், தட்டுபாடு இன்றி குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story