விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி


விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 5 Nov 2022 7:16 PM IST (Updated: 5 Nov 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

விதிமீறல் கட்டிடம் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை,

சென்னை, கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி விஜயபாஸ்கர் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, விதிமீறல் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், மனுதாரரின் தரைதளத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாக கூறி அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் அதனை அகற்றக்கோரி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், சுரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை ஆண்டுகள் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்டபின் திடீரென விழத்துக்கொள்ள காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர்.

மேலும், கட்டிடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல்துறை அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை வரும் 7-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

குடியிருப்பில் விதிமீறி கட்டப்பட்ட 3-வது தளத்தை தவிர்த்து மற்ற இரு தளங்களுக்கும் தரை தளத்துக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


Next Story