பரவலாக மழை


பரவலாக மழை
x

கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் கூத்தாநல்லூா பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படடது. இதை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் லெட்சுமாங்குடி, கோரையாறு, வேளுக்குடி, பாரதிமூலங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், வடகட்டளை, பூதமங்கலம், வடகோவனூர், தென்கோவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Next Story