பரவலாக மழை


பரவலாக மழை
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர், ஆக்கூர் பகுதிகளில் பரவலாக மழை நடந்தது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர்-ஆக்கூர் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம் நட்சத்திரமாலை, ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story