மீண்டும் பரவலாக மழை


மீண்டும் பரவலாக மழை
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை அதிகபட்சமாக சீர்காழியில் 34 மி.மீ. பதிவு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பரவலாக மழைபெய்தது. இதில் அதிகபட்சமாக சீர்காழியில் 34 மி.மீ. மழை பதிவானது.

பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த வாரம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி இரவு முதல் விடிய, விடிய இடியுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்தது.இந்த மழை காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி, தாலுகாக்களிலும், மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களில் ஒரு சில இடங்களிலும் குடியிருப்புகளையும், நெற்பயிரையும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர்கள் மீண்டும் மூழ்கின

குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தற்போது வரை மழை நீர் முழுமையாக வடியவில்லை. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பரவலாகமழை பெய்தது. சீர்காழியில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். அதிகபட்சமாக சீர்காழியில் 34 மி.மீ மழை பதிவானது. நேற்று பகலில் மழை பெய்யவில்லை.

மழைஅளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:-

சீர்காழி-34,மணல்மேடு-17, தரங்கம்பாடி-17, கொள்ளிடம்-13, மயிலாடுதுறை-8, செம்பனார்கோவில்-3.


Next Story