சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை


சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
x
தினத்தந்தி 25 Dec 2022 3:00 AM GMT (Updated: 25 Dec 2022 3:01 AM GMT)

மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை,

சென்னை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்தே எழும்பூர், புரசவைவாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கபாக்கம், மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு, கிண்டி, தி.நகர். சைதாப்பேட்டைம் கோயம்பேடு, ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பம்மல், குன்றத்தூர் உளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி, சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனையை முடித்துக்கொண்டு அதிகாலையில் மக்கள் மழையில் குடைப்பிடித்தபடி வீடு திரும்பினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்ற முறை இப்பகுதியில் பெய்த அதிகனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story