குமரி அணைப்பகுதிகளில் பரவலாக மழை
குமரி அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் கோடையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் அணைப்பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலையில் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதுபோல் பெருஞ்சாணி அணை மற்றும் பொன்மனை, குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடும் கோடை நிலவிய போதும், மலையோரப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கோதையாற்றில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி வறண்டு போகாமல் மிதமான அளவு தண்ணீர் ெகாட்டுகிறது. அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடையாமல் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story