மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
x
தினத்தந்தி 13 Dec 2022 1:00 AM IST (Updated: 13 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

மழை

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

சோலார்

சோலார், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், கஸ்பாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காைல 9.25 மணி முதல் 10.20 மணி வரை மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், கன மழையும் பெய்தது. இதனால் பள்ளிக்கூடம் சென்ற மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்ற பணியாளர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இந்த மழை காரணமாக சோலார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது. மேலும் அந்த பகுதியில் குளிர்ந்த காற்றும் வீசியது.

கோபி

கோபி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை தூறிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை கோபி, கரட்டூர், நாயக்கன்காடு, பாரியூர், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், மொடச்சூர், நல்ல கவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், அலுவலகத்துக்கு வேைலக்கு செல்லும் பணியாளர்களும் மிகவும் அவதிப்பட்டனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம். தாமரைப்பாளையம், கொளத்துப்பாளையம், கொம்பனைப்புதூர், அமராவதி புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 5.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

இதனால் மாணவ- மாணவிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், அலுவலகத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகவும் மிகவும் சிரமப்பட்டனர்.

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தை வாரம்தோறும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்த சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலையிலேயே மளிகை பொருட்களை சேலம், நாமக்கல் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்துவிடுவார்கள். மேலும் அதிகாலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து தங்கள் வீட்டுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். நேற்று காலை வழக்கம் போல் 6 மணிக்கு சந்தை கூடியது.

இந்த நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 11 மணி வரை நீடித்தது. மழை காரணமாக அந்தியூர் வாரச்சந்தைக்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மழையில் நனைந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் சந்தைக்கு பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் சந்தையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் கடையின் மீது பாலித்தீனாலான பாய்கள் மற்றும் தார்ப்பாய்களை கொண்டு மூடியபடி மழையால் நனையாதபடி நின்று கொண்டனர்.

கொடுமுடி

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. இதனால் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது.


Next Story