ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை


ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
x

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

மொடக்குறிச்சி

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை மிதமாக வெயில் அடித்தது. அதன்பின்னர் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் 1.45 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் மழை நிற்காமல் கொட்டியது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்ேட இருந்தது.

நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், சோலார், எழுமாத்தூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

பவானி

இதேபோல் பவானி, சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் அடித்தது. அதன்பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 3 மணி அளவில் திடீரென மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது.

அந்தியூர்

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

சென்னிமலை பகுதியிலும் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நேற்று மதியம் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது.


Related Tags :
Next Story