நாகை மாவட்டத்தில் பரவலாக மழை


நாகை மாவட்டத்தில் பரவலாக மழை
x

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாண்டஸ் புயல்

நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயலுக்கு பிறகு மழை இல்லாமல் வெயில் அடித்து வந்தது. நாகை பகுதி விவசாயிகள் மாண்டஸ் புயல் காரணமாக அதிக மழை பெய்யும் அதனால் விவசாயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டது. தற்போது நெற்பயிர்கள் கதிர் விடும் நிலையில் தண்ணீர் இன்றி விளைச்சல் குறைந்து பாதிக்கப்படுமா என்று விவசாயிகள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

பரவலாக மழை

இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் மத்தியப் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளான சிக்கல், கீழ்வேளூர், பரவை, பாப்பாகோவில், வேளாங்கண்ணி, திருமருகல், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story