நெல்லையில் பரவலாக மழை


நெல்லையில் பரவலாக மழை
x

நெல்லையில் நேற்று பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலை 5 மணி அளவில் லேசாக மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் இரவில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பாபநாசம்- 4, பாளையங்கோட்டை- 1, கடனாநதி- 7, குண்டாறு- 29, ஆய்க்குடி- 7, செங்கோட்டை- 33, தென்காசி- 31.


Next Story