புதுக்கோட்டையில் பரவலாக மழை


புதுக்கோட்டையில் பரவலாக மழை
x

புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலையில் வெயில் சுமாராக அடித்தது. இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் ஓரே சீராக சுமார் ஒரு மணி நேரம் பரவலாக பெய்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டு இருந்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இந்த நிலையில் மழையினால் கடைவீதியில் சாலையோர கடைகளில் விற்பனை பாதித்தது. விநாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் விற்பனை சற்று பாதிப்படைந்தது. இருப்பினும் மக்கள் குடையை பிடித்தப்படி பொருட்கள் வாங்கிச்சென்றனர்.

திருவரங்குளம் வட்டார பகுதியில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


Related Tags :
Next Story