திருக்கடையூரில் பரவலாக மழை
திருக்கடையூரில் பரவலாக மழை பெய்தது
மயிலாடுதுறை
திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம் நட்சத்திரமாலை, மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம், காலகஸ்திநாதபுரம், மாத்தூர், வெள்ளத்திடல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்து உள்ளனர்.
தற்போது வளர்ந்து வெடிக்கும் நிலையில் உள்ள பருத்தி செடியில் பூ பூத்து காய் வெடித்து உள்ளது. இந்த நிலையில் திடீரென நேற்று பெய்த மழையால் பருத்தி செடி வயலில் தண்ணீர் தேங்கியது. இதனால் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story