மனைவி விஷம் குடித்து தற்கொலை
மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி கவுசல்யா(வயது 21). இவர் தனது கணவரிடம் தனக்கு செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் சிறிது நாள் கழித்து வாங்கித்தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவுசல்யா கணவரை பயமுறுத்தும் விதமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story