மனைவி படுகொலை; விவசாயிக்கு சரமாரி வெட்டு


மனைவி படுகொலை; விவசாயிக்கு சரமாரி வெட்டு
x

திருப்புவனம் அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் அரிவாள் வெட்டில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் அரிவாள் வெட்டில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மஞ்சள்குடி காலனி பகுதியை சேர்ந்தவர்கள் மணி(வயது 53), ஈஸ்வரன். இவர்கள் 2 பேரின் வயலும் அருகருகே உள்ளது. மணி தனது விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு பெற மின்கம்பம் ஊன்ற ஏற்பாடு செய்தார்.

இதுதொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன் மகன் கண்ணன் அரிவாளால் மணி, அவரது மனைவி கனகமணி(50) ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே கனகமணி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த மணி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு மற்றும் போலீசார் மஞ்சள்குடி காலனியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story