கூடலூரில் மனைவி நல வேட்பு விழா
கூடலூரில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழா நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு மலர், கனி பரிமாறியும், காந்த தவ பரிமாற்றத்தில் கலந்து கொண்டும் ஒருவரையொருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
கூடலூர்
கூடலூரில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழா நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு மலர், கனி பரிமாறியும், காந்த தவ பரிமாற்றத்தில் கலந்து கொண்டும் ஒருவரையொருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மனைவி நல வேட்பு விழா
உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் மனவளக்கலை யோகா பயிற்சி நிறுவனருமான அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மனைவி அன்னை லோகாம்பாளின் பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 30-ம் தேதி மனைவி நல வேட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கூடலூர் நாடார் சங்க திருமண மண்டபத்தில் அன்னை லோகாம்பாளின் 108-வது பிறந்த நாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது,
வருங்கால தலைமுறையினர் தவறான பாதைகளுக்கு செல்வதை தடுக்க யோகா உதவுகிறது. அவர்களது மன நிலை, உடல் நலம் ஆகியவற்றை சீரமைக்கும் வகையிலும் யோகா பயிற்சிகள் அமைந்துள்ளது. இப்பயிற்சிகளை பெண்கள் தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
தம்பதிகள் கலந்து கொண்டனர்
முன்னதாக பேராசிரியர் சந்திரகலா தவம் நடத்தினார். செயலாளர் பாக்கியநாதன் வரவேற்று பேசினார். தலைவர் தங்கமணி தலைமையில் துனைத்தலைவர் பாண்டியராஜ், சிறப்பு தம்பதிகளாக கலந்து கொண்ட ஆசிரியர்கள் முருகேசன், ஆசிரியர் தீபா மற்றும் இசக்கியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார். பேராசிரியர் சுமிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் நடந்த மனைவி நல வேட்பு விழாவில் தம்பதிகள் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறினர். தொடர்ந்து பழங்கள் வழங்கி அன்பை பரிமாறினர். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.