வாழைகளை சேதப்படுத்திய காட்டு பன்றிகள்
திருக்குறுங்குடி அருகே வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தின.
திருநெல்வேலி
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன் (வயது 45), இளையபெருமாள் (60), செந்தில்சாமி (40) ஆகியோர்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளை குதறி பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story