அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்


அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்
x

நெல்லை அருகே அறுவடைக்கு தயாரான நெற் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் அருேக மேலக்குன்னத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போது விளைச்சல் ஆகி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்துள்ளன. அங்கிருந்த நெற்பயிர்களை நாசம் செய்துள்ளது.

நேற்று காலை இதைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட நிர்வாகம் முன்வந்து காட்டு பன்றிகளை ஊருக்குள் புகாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story