வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை
வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னதாமண்டரப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த 3 காட்டு யானைகள் அந்த பகுதி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளன. அந்த ஊரில் சுப்ரமணி மற்றும் ராஜப்பன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கு உள்ள தக்காளி செடிகளையும், மரங்களையும், தென்னை மரங்களையும், மா மரங்களையும் மிதித்து அட்டகாசம் செய்துள்ளன. காலையில் விவசாயிகள் வந்து பார்த்த போது, தக்காளி செடிகளையும், மா மறறும் தென்னை மரங்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து யானை அட்டகாசம் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story