பழனி அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


பழனி அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x

பழனி அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

திண்டுக்கல்

பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பைபட்டி மூலக்கடை பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டுயானைகள் புகுந்தன. அவை கரும்பு, தென்னை, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மின்வேலி, வயல்களில் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியும் சென்றது. நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள், பயிர்கள் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து வனவர் அம்சகணபதி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் கூறும்போது, காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அதோடு சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் செந்தில் கூறும்போது, கோம்பைப்பட்டி பகுதியில் 2 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளது. அவை தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் வனவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர ரோந்து சென்று வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.


Next Story