குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா பகுதியில் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அங்கு மத்தாய் என்பவரது வீட்டு நுழைவுவாயிலை உடைத்து சேதப்படுத்தியது. கொளப்பள்ளி, எருமாடு செல்லும் சாலையை காட்டு யானைகள் வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தோட்டங்களில் பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு போன்ற பயிர்களை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி உத்தரவின்படி, வனவர் ஆனந்தத், வன காப்பாளர்கள் குணசேகரன், ராபர்ட் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story