குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் கடந்த 30 நாட்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. அவை தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பிலும் உலா வந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் குன்னூர் நான்சச் தொழிலாளர்கள் குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை பக்காசூரன் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், காட்டு யானைகள் மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story