பவானிசாகர் பூங்காவுக்குள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்த காட்டுயானைகள்


பவானிசாகர் பூங்காவுக்குள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்த காட்டுயானைகள்
x

பவானிசாகர் பூங்காவுக்கள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்து காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் பூங்காவுக்கள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்து காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

பூங்கா

பவானிசாகர் அணைக்கு முன்பு 20 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் பொதுப்பணி துறைக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஈரோடு மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.

கடந்த 21-ந் தேதியில் இருந்து 2 முறை பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி அணையையொட்டி உள்ள பூங்காவுக்குள் நுழைந்து சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயிலில் உள்ள கதவுகளை இடித்து தள்ளிவிட்டு சென்றன.

தொடர்ந்து 3-வது நாளாக...

இதேபோல் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 3-வது நாளாக அணை பூங்காவுக்கு காட்டு யானைகள் கூட்டமாக வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானைகள் பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் அந்த காட்டுயானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பூங்கா பகுதியில் இரவு நேரங்களில் காவல் பணியில் இருக்கும் பொதுப்பணி துறை பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பொதுப்பணி துறை அணைப்பிரிவு உதவி செயற்பொறியாளர் சுரேஷ் பாலாஜி, பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமாரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.


Next Story