தேயிலை தோட்டத்தில் மோதிக்கொண்ட காட்டு யானைகள்


தேயிலை தோட்டத்தில் மோதிக்கொண்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே அரசு தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே அரசு தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

காட்டு யானைகள்

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வருகின்றன. தொடர்ந்து வீடுகள், பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம்(டேன்டீ) உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பாண்டியாறு நம்பர்.1 பி பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது.

இந்த யானைக்கும், சில நேரங்களில் அப்பகுதிக்கு தனியாக வரும் மற்றொரு காட்டு யானைக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. நேற்று காலை 8 மணியளவில் காயமடைந்த யானையும், மற்றொரு யானையும் மீண்டும் மோதிக்கொண்டன. தேயிலை தோட்டத்தை ஒட்டி சண்டையிட்டதால், பச்சை தேயிலை பறிக்க முடியாமல் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

சிகிச்சை அளிக்க வேண்டும்

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ஒரு காட்டு யானையின் தும்பிக்கையில் பலத்த காயம் உள்ளது. இதனால் தொடர்ந்து தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகளுக்கு இடையே சண்டையும் ஏற்படுகிறது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நாடுகாணி வனச்சரகர் வீரமணி கூறியதாவது:-

காட்டு யானை காயம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது மற்றொரு காட்டு யானையை கேரள வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளதால், ஊழியர்களை நேரில் அனுப்பி கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story