பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்


பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பயிர்கள் சேதம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், பட்டணம், செம்பக்கொல்லி, செட்டியங்காடி ஆகிய கிராமங்களை ஒட்டிய வனத்தில் 3 காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு உள்ளன. தொடர்ந்து இரவில் ஊருக்குள் புகுந்து பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று முன்தினம் பேபி நகருக்குள் வந்த காட்டு யானை, அதே பகுதியை சேர்ந்த ஹமீது உள்பட சில விவசாயிகளின் பாக்கு, வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதேபோல் பல இடங்களிலும் பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் மாலை அல்லது இரவில் காட்டு யானைகள் எந்த நேரத்திலும் வரும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர்.

விரட்ட கோரிக்கை

இதேபோல் செம்பக்கொல்லி கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து இடையூறு செய்து வருகிறது. இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடிய வில்லை என ஆதிவாசி மக்கள் புலம்பி வருகின்றனர். இவ்வாறு அனைத்து தரப்பினரும் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:-

சீசன் காலத்தில் பலா பழங்கள் சாப்பிடுவதற்காக, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கிராம பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளன. பலாப்பழ சீசன் முடிவடைந்து 2 மாதங்கள் ஆகிய நிலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் வாழை, பாக்கு, தென்னை மரங்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு கிராமப்புறங்களில் கரையோரம் அகழிகள் தோண்டவும், மின் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story