வாழை மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்
ஆம்பூர் அருகே வாழை மரங்களை காட்டு யானைகள் நாசம் செய்தன.
திருப்பத்தூர்
ஆம்பூர் அடுத்த பொன்னப்பல்லி பகுதியில் நேற்று முன்தினம் காலை 2 குட்டிகளுடன் 5 யானைகள் உலா வந்தன. அப்போது அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மீண்டும் யானைகள் கூட்டம் வாழை தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம், கேழ்வரகு, காய் கறி செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உமராபாத் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story