பழ பண்ணைக்குள் புகுந்த காட்டு யானைகள்


பழ பண்ணைக்குள் புகுந்த காட்டு யானைகள்
x

குன்னூர் அருகே பழ பண்ணைக்குள் புகுந்த காட்டு யானைகள் நாற்றுகளை சேதப்படுத்தியது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பலா மரங்கள் உள்ளன. பலா பழங்கள் காய்த்து குலுங்குவதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பர்லியாரில் தோட்டக்கலைத்துறையின் பழப்பண்ணையில் துரியன், மங்குஸ்தான் போன்ற பழ நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் பர்லியார் பழப்பண்ணைக்குள் புகுந்தன. அவை அங்கு வைக்கப்பட்டு இருந்த பழ நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளை விரட்டினர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பண்ணை பணியாளர்கள் சேதமடைந்த நாற்றுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story