இரவு நேரங்களில் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இரவு நேரங்களில் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இரவு நேரங்களில் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
காட்டு யானைகள் உலா
கோவையில் இருந்து ஊட்டி செல்வதற்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை முக்கியமானதாக உள்ளது. வனப்பகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த வனப்பகுதி காப்பு காடாக உள்ளது. பலாப்பழ சீசன் நேரங்களில் சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதியில் முகாமிடுவது வழக்கம். இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து கூட்டியுடன் வந்த காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார், கேன.என்.ஆர். இடையே முகாட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.
வனத்துறையினர் எச்சரிக்கை
மேலும் இந்த யானைகள் பகல் நேரங்களில் சாலையையொட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும், சாலையோரங்களில் காட்டு யானைகள் நின்றால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது, வனவிலங்குகள் அருகே சென்று செல்பி எடுக்கக்கூடாது இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.