குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள்


குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள்
x

பேரணாம்பட்டு அருகே குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

வேலூர்

குட்டியுடன் காட்டு யானைகள்

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியை ஒட்டியுள்ள பத்தலப்பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, ரங்கம் பேட்டை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள்புகுந்து விவசாய நிலங்களில் வாழை, மா மரங்களை சூறையாடி வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மோர்தானா -குண்டல பல்லி காப்பு காடு பகுதியில் ஒரு குட்டியுடன் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. நேற்று அதிகாலை முத்துக்கூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ராஜ்குமார் என்பவருடைய மாந்தோப்பில் புகுந்த யானைகள் 8 மாமரங்களையும், 5 கல் கம்பங்களை பிடுங்கிஎறிந்து சேதப்படுத்தியது.

மாமரங்கள் சேதம்

மேலும் அருகில் இருந்த ஜோதி என்பவருடைய மாந்தோப்பில் புகுந்து அங்கிருந்த 10 மாமரங்கள், 8 தென்னை மரங்களை முறித்து, அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு டன் மாங்காய்களை சேதப்படுத்தியது.

இதுபற்றி தகவலறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் சென்று கிராம மக்களுடன் இணைந்து போராடி அதிகாலை அருகிலுள்ள காப்புக்காட்டிற்குள் விரட்டினர். மாந்தோப்புகளை சூறையாடி வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.


Next Story