வாகனம் மோதி காட்டுப்பூனை படுகாயம்


வாகனம் மோதி காட்டுப்பூனை படுகாயம்
x

வாகனம் மோதி காட்டுப்பூனை படுகாயம் அடைந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பாண்டியன் பூங்கா அருகே நேற்று காலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் காட்டுப்பூனை படுகாயம் அடைந்து கிடந்தது. இதனைக் கண்ட அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கால்களில் காயமடைந்து நடக்க முடியாமல் சிரமப்பட்ட காட்டுப்பூனையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து கால்நடை டாக்டர், அந்த பூனைக்கு சிகிச்சை அளித்தார். பூரண குணமடைந்தவுடன் காட்டுப்பூனை வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story