சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாசல் ஊராட்சியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

திருமுல்லைவாசல் ஊராட்சியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த சாலைகள்

சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட காயிதே மில்லத் தெரு, நெடுந்தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களில் உள்ள சாலைகள் கடந்த 6 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

காயம் அடையும் வாகன ஓட்டிகள்

இந்த வழியாக செ ல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளின் சைக்கிள்கள் பஞ்சராகி விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காயிதே மில்லத் தெரு, நெடுந்தெரு ஆகிய சாலைகளை சீரமைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதம்மாலிக் கூறுகையில், திருமுல்லைவாசல் கிராமம் கடற்கரை கிராமமாகும். இந்த கிராமத்தில் உள்ள காயிதே மில்லத் தெரு, நெடுந்தெரு ஆகியதெருக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி வாகனங்கள் சாலை சேதம் அடைந்துள்ள இந்த பகுதிக்கு வராமல் மெயின் ரோட்டிலேயே மாணவர்களை ஏற்றி செல்கிறது. இதனால் மாணவர்களும், பெ ற்றோர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


Next Story