ஆன்ைலன் மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுமா?
ஆன்ைலன் மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 4 நாட்கள் மட்டுேம அனுமதிக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். சதுரகிரி மலை அடிவாரப்பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். ஆதலால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆன்லைன் மூலம் தரிசன டோக்கன் வழங்குவது போல சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் நேரம் ஒதுக்கி 1 மணி நேரத்திற்கு இவ்வளவு பக்தர்கள் என அனுமதித்தால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.