ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?


ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 7 July 2022 10:32 PM IST (Updated: 7 July 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே, செம்பியன்கோமல் பகுதியில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி செம்பியன் கோமல் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த பகுதிநேர ரேஷன் கடையானது சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது‌. இந்த சமுதாய கூடத்தில் போதிய வசதிகள் இல்லை. ஆகவே, ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டக்கோரி இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை அளித்தும் புதிதாக ரேஷன் கடை கட்டித் தரப்படவில்லை. ஆகவே, ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story